1. 'சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும்
தமிழ்மணந்து வேக வேண்டும்' - என்று கூறியவர்
அ. கால்டுவெல்
ஆ.க.சச்சிதானந்தன்
இ.வீரமாமுனிவர்
ஈ.தமிழழகனார்
2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர்
அ. தொல்காப்பியர்
ஆ. அகத்தியர்
இ. கால்டுவெல்
ஈ. வீரமாமுனிவர்
3. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்று பாடியவர்
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. தேவநேய பாவாணார் ஈ. அப்பாத்துரையார்.க
4. விழிகளை இழக்க நேரிட்டாலும் தாய்த் தமிழினை இழந்து விடக் கூடாது
என எண்ணியவர்
அ. திரு. வி. க
ஆ. இரா. இளங்குமரனார்
இ. பாரதியார்
ஈ. கால்டுவெல்
5. உரனசைஇ, வரனசைஇ என்பது அளபெடை
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. ஒற்றளபெடை
ஈ. சொல்லிசை அளபெடை
6. கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பது எந்த அளபெடை
அ. சொல்லிசை அளபெடை ஆ. ஒற்றளபெடை
இ. இன்னிசை அளபெடை ஈ. செய்யுளிசை அளபெடை
7. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்
அ. தொல்காப்பியர்
ஆ. திருமூலர்
இ.ஒளவையார்
ஈ. வெண்ணிக் குயத்தியார்
8. முல்லைப் பாட்டு
அ. 105
இ.583
அடிகளை கொண்டது
ஆ. 103
FT. 70
9. 'காற்றின் ஆற்றலை வளி மிகின் வலி இல்லை' என்று சிறப்பித்தவர்
அ.ஔவையார்
ஆ. இளநாகனார்
இ.ஐயூர்முடவனார்
ஈ. இள்ளங்கோவடிகள்
10. இந்தியா, சுதேசமித்திரன் இதழ்களின் ஆசிரியர்
அ. தமிழழகனார்
ஆ. பாரதிதாசன்
இ. பெருஞ்சித்திரனார் ஈ. பாரதியார்
11. வீசுதென்றல், கொல்களிறு என்பதன் இலக்கணக் குறிப்பு
அ. வினைத்தொகை
ஆ. பண்புத்தொகை
இ. வேற்றுமைத்தொகை ஈ. அன்மொழித்தொகை
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி:
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட, நறுவீமுல்லை.
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. பரிபாடல்
ஆ. முல்லைப் பாட்டு
இ. மலைபடுகடாம்
ஈ. காசிக்காண்டம்
13. இப்பாடலின் ஆசிரியர்
அ. தமிழழகனார்
இ. பெருங்கௌசிகனார்
ஆ. அதிவீர்ரராம பாண்டியன்
ஈ. நப்பூதனார்
14. மூதூர் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ. பண்புத்தொகை
ஆ. வினைத்தொகை
இ. அன்மொழித்தொகை ஈ. உரிச்சொல்
15. 'நனந்தலை உலகம்'-பொருள்
அ. சிறிய உலகம் ஆ. நனைந்த உலகம்
இ. சுற்றும் உலகம் ஈ. அகன்ற உலகம்
Comments
Post a Comment